Breaking
Sun. Mar 16th, 2025

கடும் எச்சரிக்கையின் அடிப்படையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் கூட்டம் நடத்தியமை தொடர்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னிலையாகாமை தொடர்பில் ஞானசார தேரருக்கு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஞானசார தேரர் நேற்று மதுகம நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.இதன் போது கடுமையான எச்சரிக்கை விடுத்து ஞானசார தேரரை நீதவான் கோசல சேனாதீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள விஹாரை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் கூட்டம் நடத்தியமை தொடர்பில் வெலிபன்ன பொலிஸார் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இரண்டு வழக்கு தவணைகளின் போது நீதிமன்றில் முன்னிலையாகத் தவறிய ஞானசார தேரர் நேற்று, வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகியிருந்தார்.

நீதிமன்றின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளிக்காமை தொடர்பில் நீதவான் கடும் எச்சரிக்கை விடுத்து பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளார்.

By

Related Post