Breaking
Fri. Jan 10th, 2025

அஸ்ரப் ஏ சமத்

கடுவலை வெலிவிட்ட ஜரீனா முஸ்தபாவாவின் 30 ஆண்டுகளாக எழுதி வருகின்ற முஸ்லீம் பெண் நாவல் எழுத்தாளர்.; இதுவரை 8 நாவல்களை எழுதியுள்ளார். இன்று கடுவலை வெலிவிட சிங்கள பிரதேசத்தில் முதன்முதலாக தமிழ் மொழியில் நாவல் நூல் வெளியீட்டு வைக்கும் வைபவம் ஜரினா முஸ்தபாவின் வெலிவிட்ட இல்லத்தில் நடைபெற்றது.

இந் நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு கொழும்பில் இருந்து கடுவலைக்கு பல இலக்கியவாதிகள் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

நூல் வெளியீட்டு வைபவம் கலைவாதி கலீல் தலைமையில் நடைபெற்றது. புரவலர் ஹாசீம் உமர் நூலின் முதற்பிரதியை நூலசிரியடிடமிருந்து பெற்றுக் கொண்டார். மீலேணியம் கல்வி வட்ட தலைவர் மொளலானர், திக்குவலை கமால், கவிஞர்களான நஜ்முல் ஹூசைன், கிண்னியா அமீர் அலி கலைச்செல்வன் றவுப் ஆகியேர்றும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இங்கு உரையாற்றிய கலைவாதி கலீல் –
ஈழத்தின் முதலாவது நவீன நாவலை எழுதியிருப்பவர் பிரபல சிறுகதை எழுத்தாளர் நயீமா சித்தீக் அதக் பின்னர் சுலைமா சமி இக்பால், ஸனீரா காலிதீன் போன்ற வரிசையில் கடுவலையில் வசிக்கும் வெலிவிட்ட என்ற சிங்கள பிரதேசத்தின் பெயரை முன்னிருத்தி ஜரினா முஸ்;தபா எழுதி வருகின்றார். மித்திரன் பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதிவரும் ஜரீனா இதுவரை 8 நாவல்களை எழுதியிருகின்றார். அவளுக்கு தெரியாத ரகசியம், எனும் இந்த நாவல் ஏற்கனவே மித்திரன் வாரமலரில் 59 அத்தியாயங்களாக பிரசுரிக்கப்பட்டது.

இது ஒரு ராட்சஷpயின் கதை, இந்தியாவில் இஸ்லாமிய மாதர் மாத இதழான நர்கிஸ் உம் மல்லாரிப் பதிப்பகம் இணைந்து சர்வதேச பரிசு சரினா முஸ்தபவாவுக்கு கிடைக்கப்பெறற்து. அடுத்து 37ஆம் நம்பர் வீடு, ரோஜாக் கூட்டம் சிறுவர் சிறுகதைத் தொகுதி ஆகிய நூல்களையும் இரண்டாம் பதிப்பாக வெளியீட்டுள்ளார். மேலும் யதார்த்தங்கள் எனும் நூலையும் வெளியீட்டுள்ளார்.

Related Post