கடைகளை மூடி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாது எனநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுடைய உண்மை நிலையினைப் புரிந்து கொண்டு அதற்கான தீர்வினைபெற்றுக்கொடுப்பது மக்களிடம் நேரிடையாக சென்று கலந்துரையாடுவதன் மூலமே என்றும்அவர் தெரிவித்துள்ளார்.
அதைவிடுத்து கொழும்பில் இருந்து கொண்டு அறிக்கைகைளையும்,சுற்றுநிருபங்களையும் வெளியிடுவதன் மூலம் மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாதுஎன்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம்,விலச்சி மற்றும் கொக்கிச்சி பிரதேச மக்களை சந்தித்த போதே அமைச்சர்ரவி கருணாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்குள்ள விவாசாயிகளை சந்தித்த அமைச்சர் அவர்களது உரம், தொழிநுடப்கருவிகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டை கட்டியெழுப்ப நிதி தேவைப்படுவதாகவும், அதற்காக வரி அறவிடுவது அவசியம்என்றும் குறிப்பிட்டுள்ள அமைச்சர், குறித்த வரியினை வீணாக்காமல் மக்களுக்காகசெலவு செய்வது அரசின் பொறுப்பென்றும் அதற்காகவே அரசு செயற்படுவதாகவும்குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் அமைச்சர் ஹெரிசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்ததாககுறிப்பிடப்பட்டுள்ளது.