Breaking
Mon. Dec 23rd, 2024

தேர்தலில் போட்டியிடும் அரசியல்  கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் தலைவர்களுக்கு மாத்திரம் பொலிஸ்  பாதுகாப்பு வழங்குவதற்கு  தேர்தல்கள் ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.

கட்சிகளின் செயலாளர்கள் மற்றும்  குழுக்களின்  தலைவர்களைத் தவிர்த்து  ஏனைய வேட்பாளர்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்க இயலாதெனத் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கட்சிகளின் செயலாளர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
யாரேனும் வேட்பாளருக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுமானால் அதுபற்றி தேர்தல் அலுவலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் கட்சிகளின் செயலாளர்களுக்குத தெரியப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய கட்சிச் செயலாளர் மற்றும் வேட்பாளர் ஒருவருக்கு பாதுகாப்புக்கு இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வழங்கப்படுவர் எனவும் தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

Related Post