ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இறுதியாக இன்று நாடாளுமன்றம் கூடவுள்ளது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கட்சித் தாவக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு கட்சித் தாவுவதனை தடுக்கும் நோக்கில் கட்சிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று பிற்பகல் 1.30 அளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகளின் போது மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளவும், ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவித்து ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளவும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.