– இர்ஷாத் றஹ்மத்துல்லா –
கட்சி என்பது கிப்லாவோ குர்ஆனோ அல்ல அது ஒரு சங்கம்,அது சமூகத்திற்காக இருக்க வேண்டும்,அரசியலுக்காக தான் கட்சி இருக்க வேண்டுமே தவிர மக்களை அடக்கி வைப்பதற்காக அந்த கட்சிகள் இருக்காது என தெரிவித்துள்ள சமூர்த்தி,வீடமைப்பு பிரதி அமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட ஜக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளருமான எம்.எஸ்எஸ்.அமீர் அலி இந்த கட்சிகளை தமது விசுவாசமாக ஏற்றுக்கொண்டு அதிலிருந்து சமூகத்திற்கு தேவைப்படுகின்ற போது விடுபாடாத நிலைய ஏற்படும் என்றால் அதில் ஏதோ தவறு இருப்பதாகவும் கூறினார்.
திருகோணமலை மாவட்டத்தில் இலக்கம் 1 ஜக்கிய தேசிய கட்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் போட்டியிடும் அப்துல்லா மஹ்ரூபை ஆதரித்து புல்மோட்டை விளையாட்டு மைதானத்தில் இடம் பெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர்,அமைச்சர் றிசாத் பதியுதீன் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டஇந்த கூட்டத்தில் மேலும் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தனதுரையில் மேலும் கூறியதாவது –
மட்டக்களப்பிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு இம்முறை ஆசனமில்லை இதை அறிந்து கொண்ட அந்த தலைமை இன்று கட்சியினை காப்பாற்றுங்கள் என்று ஒப்பாரிவிடுகின்ற நிலைமையினை கானுகின்றோம். அது போல் தான் திருகோணமலை மாவட்டத்திலும்,இந்த மாவட்ட மக்களுக்கு உள்ள காணிப்பிரச்சினைகள் தொடர்பில் தெரியாத நிலையிலும்,இப்பிரதேசத்தில் உள்ள இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க முடியாத ஒரு தலைமை்தவமாகத் தான் இந்த காங்கிரஸ் இருக்கின்றது.
முஸ்லிம்களது பிரச்சினைகள்,காணிப்பிரச்சினையுடனும்,தொழில் பிரச்சினையுடன் மட்டும் மட்டுப்படுத்த முடியாது.தேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் மௌனிக்கும் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாறிவிட்டது.மன்னார் மறிச்சுக்கட்டியில் முஸ்லிம்களது காணிகளை வில்பத்து என்று கூறி பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் ஆக்ரோஷமாக செயற்பட்ட போது பேசா மடந்தையாக இருந்த அந்த கட்சியின் அரசியல் அஸ்தமனம் இந்த தேர்தலில் இருந்து ஆரம்பிக்கப் போகின்றது என்ற செய்தியினை இந்த புல்மோட்டையில் இருந்து நான் சொல்லவிரும்புகின்றேன்.
இந்த பிரதேச மக்களது தொழில் வாய்ப்பிற்கான உத்தரவாதத்தை எமது தலைமைத்துவம் இங்கு வழங்கும்,இங்குள்ள மக்கள் இதனை அனுபவிப்பமதற்கு ஒரு அருமையான சந்தர்ப்பம்,றிசாத் பதியுதீன் என்கின்ற ஆத்தமார்த்தமான அகில இலங்கை மக்கள் தலைமை இந்த நாட்டில் சமூக விடுதலைக்காக போராடும் என்ற நற்செய்தியினை இங்க கூறிக் கொள்வதாக பிரதி அமைச்சர் அமீர் அலி கூறினார்.