Breaking
Sun. Dec 22nd, 2024
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தராதரம் பாராது ஒழுக்க விதிகளை மீறுவோர் தண்டிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்றிரவு (8) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களுடனான சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டுமென அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.

சில தரப்பினர் கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு புறம்பான வகையில் சில காரியங்களில் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறு செய்வதனால் கட்சிக்கு பாரதூரமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும என தெரிவித்துள்ளார்.

இதன் போது ஓரு குழுவினை இலக்கு வைத்து பழிவாங்கும் நடவடிக்கை தடுக்க தலையீடு செய்யுமாறு சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.

எந்தவொரு தரப்பும் பழிவாங்கப்படவில்லை எனவும், குற்றம் செய்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களுக்கு பதிலளித்துள்ளார்.

By

Related Post