Breaking
Wed. Dec 25th, 2024

– எம்.ரீ.எம்.பாரிஸ் –

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக பாராளுமன்றத்திற்குத் தெரிவான ஐந்துபாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் வைபவம் கடந்தவெள்ளிக்கிழமை11.09.2015 அன்று மாலை மட்டக்களப்பு கல்குடாத் தொகுதியில்இடம் பெற்றது.

இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சரும் அகில இலங்கைமக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஸாட் பதியுதீன்ஓட்டமாவடி பலநோக்குக் கூட்டுறவுச்சங்க வளாகத்தில் இடம் பெற்றபொதுக்கூட்டத்தில் இவ்வாறுஉரையாற்றினார்.

‘இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதி மக்கள் ஒரு செய்தியைசொல்லி இருக்கின்றீர்கள். கல்குடா தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில்மாத்திரம் தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெறலாம் என்ற ஒருமாயையைத்தான் கடந்த பொதுத்தேர்தலில் கூட அக்கட்சியின் போராளிகள் அதன்தலைவர்கள் கிளப்பி கொண்டு இருந்தார்கள்.

ஆனால்; அல்-ஹம்துலில்லாஹ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்ஊடாக இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த மண்னை சேர்ந்த ஒருவரைபாராளுமன்றம் அனுப்பலாம் என்ற உண்மை செய்தியை நாம் தேசியத்திற்கும்,உலகிற்கும் சொல்லி இருக்கின்றோம்.

கட்சியை நம்பி, சின்னத்தை நம்பி, அல்லது இந்த கட்சி, அந்த கட்சியால் தான்முடியும் என்ற ஒரு அரசியல் தலைவர் இன்று இருக்கின்றார்.

அவரின் நோக்கமெல்லாம் அவருடைய கட்சி வாழ வேண்டும், மரணிக்கும் வரை அவர் தலைவராக இருக்க வேண்டும், அமைச்சராக இருக்க வேண்டும் என்பவற்றினைத்தவிர அவருடைய நோக்கங்கள் எதுவும் கிடையாது.

ஒரு லட்சம் முஸ்லிம் அகதிகளாக வந்தவர்களை குடியேற்றவேண்டும் என்றோ,கிழக்கில் இருக்கின்ற முஸ்லிம் மக்களுடைய காணிப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்றோ, சவூதி அரசு கொடுத்த 500 வீடுகள் திறக்கப்படாமல் இருக்கிறதுஅதனை திறந்து கொடுக்க வேண்டும் என்றோ, அல்லது பெரும் தலைவர் அஷ்ரப்கட்டிய தென்கிழக்கு பல்கலைக்கழகம் இன்னும் பல வீர நடை போட்டு இயங்கவேண்டும் என்றோ, ஓலுவிலில் துறைமுகத்தினை கொண்டு வந்த அந்த தலைவர்மரணித்து விட்டார் அவருடைய கனவினை எவ்வாறு நினைவாக்கலாம் என்றோஎந்த ஒரு திட்டமும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவராகிய றவூப் ஹக்கீம்அவர்களிடம் கிடையாது.

திட்டமெல்லாம் அமீர் அலி தோற்கடிக்கப்பட வேண்டும், றிஸாத் பதியுதீன் இந்தஅரசியலில் இருந்து அழிய வேண்டும், இன்னும் பலர் தோற்க வேண்டும் என்பதும்தான் இந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருடைய சிந்தனையாகஇருக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி துஆக்களினால், தியாகத்தினால், இறையச்சத்தினால்வளர்த்த கட்சி. கூலி வேலை செய்தவர்கள், விவசாயிகள், மீன்பிடித்தொழில்செய்பவர்கள் தங்களுடைய பணங்களை செலவு செய்து, வியர்வை சிந்தி, நோன்புநோற்று உருவாக்கிய அந்த இயக்கம் இன்று எவ்வாறு தேர்தல் காலங்களில்செயற்படுகின்றது என்று பார்த்தால் அரிசி கொடுத்து மா கொடுத்து தேர்தல்காலங்களிலே வாக்கு கேட்குமளவுக்கு மாறிவிட்டது. இதனைத் தான் கடந்தமாகாண சபைத் தேர்தலிலும் செய்தார்கள். மட்டக்களப்பிலும மன்னாரிலும் இம்முறை எழுச்சி மாநாடு நடாத்தினார்கள்.

இன்னும் அக்கட்சிக்காக பேசுகின்றவர்கள் அந்த கட்சி வாழ வேண்டும் என்றுசொல்லுகின்றவர்கள் சிந்திக்க கடமை பட்டிருக்கின்றீர்கள். சமூகம் வாழவேண்டுமா? 20 இலட்சம் முஸ்லிம்களும் இந்நாட்டில் தலை நிமிர்ந்து வாழவேண்டுமா? இச் சமூகம் கல்வி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில்தலைநிமிர்ந்து வாழ வேண்டுமா? என்று பாருங்கள்.

அண்ணன் சம்மந்தன் அவர்கள் இன்று 16 பாராளுமன்ற உறுப்பினர்களோடுஎதிர்க்கட்சி தலைமை என்ற கௌரவத்தை பெற்றுள்ளார். ஆனால் இன்று அமீர்அலிக்கு அதை கொடுக்காதே றிஸாத் பதியுதீனுக்கு இதை கொடுக்காதே என்பதுதான் இந்த தலைவனுடைய பிராத்தனையும், பிரச்சினையுமாக இருக்கின்றது.

நிறைய தேவையுடைய சமூகமாக நாம் இருக்கின்றோம் மூன்றில் இரண்டு சமூகம்வட, கிழக்கிற்கு வெளியே வாழ்கின்றது.

வைத்தியர்கள், சட்டத்தரனிகள், பொறியலாளர்கள் இல்லை என்று இவ்வாறு எமதுசமூகம் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றது. எமது சமூகம் மிக மிகபின்தள்ளப்பட்டிருக்கின்றது.

எந்தளவுக்கு என்றால் கல்வி, வைத்தியதுறை மற்றும் விஞ்ஞானத்துறைகளில்மூன்று வீதமும் ஏனைய திட்டமிடல், பொது நிருவாகம் போன்ற துறைகளில் 2வீதமும் தாம் நாம் இருக்கின்றோம். இந்த நாட்டில் 10 வீதம் வாழ்கின்றோம் என்றுபெருமையாக சொல்கின்றோம் எங்களுடைய வளர்ச்சிதான் கூடுதலாகஇருக்கின்றது என்று பெருமையாக பேசுகின்றோம்.

நாம் சிந்திக்க கடமை பட்டிருகின்றோம் பணக்காரர்களுக்கு ஸகாத்கடமையாக்கப்பட்டிருப்பது போல எமக்கு தொழுகை கட்டாயக்கடமை போல எமதுவாக்குகளை சரியாக அளிப்பது கட்டாயமாகும்.

நாம் எமது வாக்குகளை தேர்தல் காலங்களில் வெறும் 10 கிலோ அரிசிக்கும்,மாவுக்கும், பணத்திற்காகவும் வாக்களித்தோமா? அல்லது எமது நியாயமானகோரிக்கைகளையும், அபிலாஷைகளையும் வென்றெடுப்பதற்கானபோராட்டத்திற்காக வாக்களித்தோமா? என்று நாம் அல்லாஹ்விடத்தில் பதில்சொல்ல கடமை பட்டிருக்கின்றோம்.

இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரினது குறிக்கோளினைபாருங்கள். அமீர் அலியை தோற்கடிக்கும் திட்டம், ஹிஸ்புல்லாவை தோற்கடிக்கும்திட்டம் அல்லாஹ்வுடைய வேலை ஹிஸ்புல்லாஹ் புனர்வாழ்வு அமைச்சராகவும்அமீர் அலி கிராமிய பொருளாதார அமைச்சராகவும் வரவழைத்துள்ளான்.

எது எவ்வாறாயினும் நாம் எமது சமூகத்திற்காகவும், எமது மக்கள் இந்நாட்டில்தலை நிமிர்ந்து வாழ்வதற்காகவும், எமது இளைஞர்களுடைய எதிர்காலம்கேள்விக்குறியாகி விடக்கூடாது என்பதற்காகவும் அன்று நாம் பொதுபலசேனாவின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்றும் அதிகார மமதையோடு எமதுசமூகத்தை அடக்கி ஒடுக்க பார்த்த அந்த மஹிந்த ராஜபக்ஷ என்ற மனிதரைவீழ்த்துவதற்காக எந்த ஒரு சிறுபான்மை இனத்தின் கட்சிகளும் தீர்மானிப்பதற்குமுன்பாக நாம் மைத்திரி அணியில் இணைந்து கொண்டோம்.

எனவே எமது சமூகத்திற்கு யார் அநீதி இழைத்தாலும் நாம் எமது பதவியினைஇழந்துதான் குரல் கொடுக்க வேண்டிய நிலை வந்தாலும் அதையும் நாம்செய்வதற்கு தயாராக இருக்கின்றோம் என தமது உரையின் போதுகேட்டுக்கொண்டார்.

Related Post