Breaking
Sun. Dec 22nd, 2024

மின் கட்டணத்தைக் குறைத்துக்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ‘மின்சாரப் பரிசு’ வழங்கும் வேலைத்திட்டமொன்றை, இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளது.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட மின்வலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ‘கடந்த ஜனவரி மாதம் முதல் மின் கட்டணத்தைக் குறைத்துக்கொண்டவர்களும் இந்த போட்டியில் உள்ளடக்கப்படுவார்கள்’ என்று கூறினார்.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் வாடிக்கையாளர்களுக்கு, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

By

Related Post