பிரித்தானியாவில் குடிபெயர்ந்து வாழும் குடும்பங்களில் கட்டாயத் திருமணம் செய்யும் நாடுகளின் முதல் 10 பட்டியலில் இலங்கை, ஆறாம் இடத்தை வகிப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது.
குறித்த ஆய்வை மேற்கோள்காட்டி, பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவை அடுத்து ஆறாம் இடத்தில் இலங்கை உள்ளதாகவும் காட்டாயத் திருமணமானது பிரித்தானியாவில் தண்டணைக்குரிய குற்றமெனவும் என்.டீ.டிவி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பாக்கிஸ்தான் 38.3 சதவீதத்துடன் முதலாமிடத்தையும் இந்தியா 7.8 சதவீதத்துடன் இரண்டாமிடத்தையும் பங்களாதேஷ் 7.1 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் ஆப்கானிஸ்தான் 3 சதவீதத்துடன் நான்காம் இடத்தையும் சோமாலியா 1.6 சதவீதத்துடன் ஐந்தாம் இடத்தையும் இலங்கை 1.1 சதவீதத்துடன் ஆறாம் இடத்தையும் பெற்றுள்ளன.
அத்துடன், துருக்கி 1.1 சதவீதத்துடன் ஏழாம் இடத்தையும் ஈரான் 1 சதவீதத்துடன் எட்டாமிடத்தையும் மற்றும் ஈராக் 0.7 சதவீதத்துடன் ஒன்பதாம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.