கட்டாரில் இருந்து பழுலுல்லாஹ் பஹ்ஜான் அப்பாஸி
கட்டாரில் இயங்கும் SLDC ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘யார் அந்த குரபாக்கள்’ எனும் தலைப்பிலான இஸ்லாமிய மாநாடு நேற்று (14) வெள்ளிக்கிழமை கட்டார் (அல் பனார்) அப்துல்லாஹ் பின் ஸைத் மாநாட்டு மண்டபத்தில் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் இத்ரீஸ் ஹஸன் (ஸஹ்வி) தலைமையில் இடம்பெற்றது.
இம் மாநாட்டில் சர்வதேச மெங்கும் இஸ்லாத்தை ஏந்திச் செல்லும் தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபல மார்க்க சொற்பொழிவாளர் அஷ்ஷெய்க் அப்துல் பாஸித் புகாரியினால் ‘யார் அந்த குரபாக்கள்’ எனும் தலைப்பில் விசேட சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.
மாலை 07.00 மணியிலிருந்து இரவு 10.00மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்பேசும் பெருமளவிலான ஆண், பெண் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர்.
குறித்த ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையம் கடல்கடந்து வாழும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு புனித தீனுல் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: வாரந்தோரும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தினால் திங்கட்கிழமை இஷாத் தொழுகையைத் தொடந்து ஸனாஇய்யா 23 பனார் கிளையிலும் வியாழக்கிழமைகளில் அல்-மனார் டவருக்குப் பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அல் கஸ்ஸாபி பள்ளியிலும் வெள்ளிக்கிழமைகளில் ஜும்மாத் தொழுகையைத் தொடர்ந்து பனார் 5ம் மாடியிலும் அதே தினத்தில் ஜும்மா மொழிபெயர்ப்பு அஸீஸிய்யா மஸ்ஜித் அல் முழப்பரிலும் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான மார்க்க நிகழ்வுகளில் கலந்துகொண்டு பயன்பெருமாரு கடல் கடந்து வாழும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களை ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையம் அன்போடு கேட்டுக்கொள்கின்றது.