கத்தார் நாட்டுக்கு சென்று சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக 3 மாத பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 1 ஆம் திகதியிலிருந்து டிசெம்பர் 1ஆம் திகதி வரை இப்பொது மன்னிப்பு காலம் நடைமுறையில் இருக்கும் என வெளிநாட்டு வேலaைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி கத்தாருக்கு தொழிலுக்காக சென்று வீஸா காலாவதியான நிலையில் அதனை புதிப்பிக்காது சட்டவிரோதமான முறையில் தங்கியிருப்பவர்களுக்கு இந்தப் பொது மன்னிப்பு காலத்தினுள் தத்தமது தாய் நாட்டுக்கு செல்லக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கத்தாருக்கு நாட்டில் தற்போது ஒரு இலட்சத்து 46 ஆயிரத்துக்கும் அதிமான இலங்கையர்கள் பணிபுரிந்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.