Breaking
Wed. Dec 25th, 2024

மௌலவி எம்.ஐ.எம். நௌபர் (காசிபி)

நேற்றைய (11/01/2015) கட்டார் நாட்டின் “அர் றாயஃ”பத்திரிகையில் கட்டார் நாட்டின் புதிய தொழில் சட்டம் தொடர்பில் ஒரு ஆக்கம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பயன்பாடு கருதி அது தொடர்பான விபரங்களை இங்கு சுருக்கமாகத் தருகின்றேன்.

1.கட்டார் நாட்டின் தொழில் சட்டங்களின் புதிய திருத்தங்களை “மஜ்லிஸு ஷ் ஷூறா” (கிட்டத் தட்ட பாராளுமன்றம்!!)அங்கீகரித்து விட்டது.குறித்த சட்டத் திருத்தங்கள் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

2.குறித்த சட்டத் திருத்தங்கள் தொழிலமைச்சின் மீதான புதிய சுமையை ஏற்படுத்தியுள்ளது என்ற வகையில் இத்திருத்தங்களை அதன் சரிஒயான வடிவில் அமுலாக்குவது தொடர்பில் அவ்வமைச்சின் அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கான விஷேட பயிற்சிகள் வழங்கப் பட வேன்டும் என சட்ட வல்லுனர்களும் தொழிலதிபர்களும் கருதுகின்றனர்.

3.அத்துடன் நிறுவனங்களின் முதலீடு ,வேலைக் களங்களுக்கு ஏற்ப அதன் தொழிலாளர்களின் எண்ணிக்கையை வரையறை செய்வது, நிறுவனங்கள் அவைகளுக்குரிய கொடுப்பனவுகளை உரிய நேரத்தில் பெற்று தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்படுகின்றது.

4. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கட்டார் நாட்டின் வர்த்தக, உற்பத்தி நிர்வாக சபையின் அங்கத்தவர் முஹம்மத் உபைதலி அவர்கள் “அரச நிறுவங்கள் நிர்மானத்திட்டங்களை செயற்படுத்தும் தனியார் நிறுவனங்களுக்க்கான கொடுப்பனவுகளை உரிய நேரத்தில் வழங்குவதும் அதனையொட்டி தனியார் நிறுவனங்கள் தங்கள் தொழிலாலர்களுக்கான சம்பளங்களை அவர்களது பிரத்யேக வங்கிக் கணக்குளூடாக வழங்குவதையும் வலியுறுத்தினார்.

5.மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தொழிலதிபர் நாஸர் அத்தைலமி அவர்கள் குறித்த சட்டத்திருத்தங்களை அமுலாக்கம் செய்வதில் குறிப்பாக “கட்டாரில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் ஆறுமாத காலத்தில் தொழில் நிமித்தம் கட்டார் நாடு வருவது தொடபிலான சட்டத்தை ”கண்காணிப்பதில் தொழிலமைச்சு அதிக கரிசனை காட்ட வேண்டும் எனக் குறிப்பிடார்.

6.இது தொடர்பில் மேலும் கருத்துகளை வெளியிட்ட முக்கியஸ்தர்கள் தொழிலாளர் கொடுப்பனவுகள் ,மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் குறித்த சட்டத் திருத்தங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியதுடன் கடந்த காலங்களில் அதிகம் சிக்கல்களை ஏற்படுத்திய உரிய நேரத்தில் சம்பளம் வழங்காமை தொழிலாளர் தொழில் வழங்குனர்களை விட்டும் விலகிச் செல்லல் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைய வேண்டும் என வலியுறுத்தினர்.

Related Post