Breaking
Sun. Dec 22nd, 2024

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஜா-எல வெளியேறும் வாயில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மின் கம்பத்தில் மோதியமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில், ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதான இருவர் பலியாகியுள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா-எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By

Related Post