ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, தேர்தல் பிரசார கூட்டங்கள் சிலவற்றில் நேற்றைய தினம் கலந்துகொண்டார்.
கொலன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டார்.
“எதிர்வரும் 8ஆம் திகதி மைத்திரியின் ஆட்சி, நல்லாட்சியை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். 8ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை மூடப்போகின்றார்களாம். ஒவ்வொரு வரையும் செல்வதற்கு இடமளிக்க மாட்டார்களாம். அவர்களுக்குத் தேவையான நபர்கள் மாத்திரமே செல்ல அனுமதிக்கப்படுமாம். எந்தவொரு நபரும் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கூறுகின்றனர்.
அதுவா நல்லாட்சி? பரவாயில்லை. எமது தந்தை மத்தள விமான நிலையத்தை நிர்மாணித்தார். ஏனையோருக்கும் செல்ல முடியும். அதனை மறந்துள்ளனர். மத்தளவை மறந்து விட்டனர். எனினும், யார் செல்கின்றார்கள் என தெரியவில்லை. நாம் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானாலும், நாட்டை விட்டுச் செல்லமாட்டோம்.