கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசலகூடங்களில் இருந்த ஹேண்ட்பவர் ( சுத்தப்படுத்தும் உபகரணம்) அகற்றப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக டொயிலட் டிசு, சகல மலசலகூடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.
நீரை பாவிப்பதன் காரணமாக விமான நிலையத்தில் உள்ள மலசலகூடம் எந்தநேரமும் ஈரமான நிலையில் காணப்பட்டது.
அதனால், சிங்கபூரில் நடைமுறையில் உள்ளதைபோல டொயிலட் டிசு, சகல மலசலகூடங்களிலும் வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, சுத்தப்படுத்தும் முறை தொடர்பில் அதிக அவதானம் செலுத்தும் இலங்கையர்கள், இந்த புதிய நடைமுறை காரணமாக அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை(23) முதல் இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதாக அறியமுடிகின்றது.