Breaking
Thu. Jan 16th, 2025

கணவன் இறந்ததைப் பார்த்த உடனே மனைவியும் அதிர்ச்சியில் இறந்து போன துயரச் சம்பவமொன்று மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் இடம்பெற்றுள்ளது.

எட்டுப் பிள்ளைகளின் பெற்றோரான கணவர் பூபாலபிள்ளை கனகரெத்தினம் (வயது 77), மனைவி கனகரெத்தினம் இராசம்மா (வயது 70) ஆகிய தம்பதியரே ஒரேநாளில் இறந்துள்ளனர்.

இந்த துயரமான சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றது இருவரினதும் நல்லடக்கம் உப்போடை மயானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.  இவ்விரு சடலங்களும் ஒரே புதைகுழியில் அருகருகே புதைக்கப்பட்டன. zn

Related Post