Breaking
Fri. Dec 27th, 2024

-வி.தபேந்திரன் –

சமூக சேவைகள் அமைச்சின் முதியோர் செயலகத்தால் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை கணவன், மனைவி இருவரும் பெறுவதற்கான புதிய சுற்றுநிரூபத்தை அமைச்சின் செயலாளர் டீ.கே.றேணுகா ஹேரத் மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

70 வயதை கடந்த முதியவர்களுக்கு மாதாந்தம் 2,000 ரூபாய் வழங்கும் திட்டம், சமூக சேவை அமைச்சால் முன்னெடுக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் கணவன், மனைவி இருவரும் 70 வயதைக் கடந்திருந்தாலும் ஒருவருக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்பட்டது.

ஆனால், தற்போது அந்தத் திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு 70 வயதைக் கடந்த கணவன், மனைவி இருவருக்கும் அந்த உதவித் தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post