அமெரிக்க இலக்குகள் மீது சைபர் தாக்குதல்களை நடத்துபவர்கள் மீதும், அந்தத் தாக்குதல்களால் பலன் அடைபவர்களையும், தண்டிக்க உள்ள பொருளாதாரத் தடைகளை பிரயோகிப்பதை, அந்நாட்டின் அதிபர் ஒபாமா அங்கீகரித்துள்ளார்.
அதிகரித்துவரும் இத்தகைய சைபர் தாக்குதல்களை, தேசிய அவசர நிலையாக விவரித்துள்ளார்.
அமெரிக்கவை எதிர்நோக்கியிருக்கும் மிக மோசமான பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு சவால்களுள், இந்த சைபர் தாக்குதல்களும் அடங்கும் என அவர் கூறினார்.
வங்கி அமைப்புகள் போன்று மிகவும் நுட்பமான கணினி வலையமைப்பு கொண்ட அமைப்புகளின் மீது சைபர் தாக்குதல்களை நடத்துவோரின் உடமைகளை இனிமேல் அமெரிக்கக் கருவூலம் முடக்கிவிடும் என்று தெரிகிறது.
சோனி பிக்சர்ஸ் நிறுவனம்மீது நடத்தப்பட்ட டிஜிட்டல் தாக்குதல் உள்பட, பல பிரபல நிறுவன்ங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.
இவை ஆயிரக்கணக்கான கணினிகளை முடக்கியிருக்கின்றன.