Breaking
Thu. Jan 16th, 2025

கண்டியில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை மாணவியை பாடசாலைக்கு  ஏற்றிச்செல்லும் வாகனத்திற்குள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய  சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கண்டி வாவி சுற்றுவட்ட சிவப்பு மதகு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம்  ஒன்றில் வல்லுறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பொலிஸார் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.

குறித்த மாணவி வாகன சாரதியான 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையால் மூன்று வருடங்களாக இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த வாகனத்தில் கறுப்புக் கண்ணாடி பொருத்தப்பட்டதெனவும் அது அகில இலங்கை அனைத்து மாவட்ட பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சேவை சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி வைத்திய பரிசோதனைக்கென கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Post