Breaking
Tue. Jan 14th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், கண்டி மாவட்ட பாத்ததும்பரை பிரதேச சபையின் உறுப்பினராக நியமனம் பெற்ற அஸ்மி ஹசீம் , இன்று (09) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

சமாதான நீதவான் அல்ஹாஜ் சஹீத் ரிஸ்மி ( YMMA பேரவையின் பதில்  தேசிய தலைவர்) முன்னிலையில் அவர் சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்.

பாத்ததும்பரை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.எம்.இர்சாத், கட்சித் தலைமையுடன் செய்து கொண்ட உடன்பாட்டின் பிரகாரம், தனது பதவியை இரு வருடங்களில்  இராஜினாமா  செய்திருந்தார். அதன் படி புதிய உறுப்பினராக கட்சித் தலைமை, மடவளையைச் சேர்ந்த அஸ்மி ஹாசிமை சிபாரிசு செய்திருந்தது.

அதனடிப்படையில் கண்டி மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அதிகாரி ஏ.சி.தலங்கம அவர்களால், மேற்படி பதவிக்கு அவர் நியமனம் செய்யப்பட்டு, சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

பாத்ததும்பரை பிரதேச சபை தலைவர் திரு. சூட்டி அபேசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாத்ததும்பரை பிரதேச செயலாளர் திருமதி சிரியானி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கண்டி மாவட்ட இணைப்புச் செயலாளர் ரியாஸ் இஸ்ஸதீன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர்.

Related Post