Breaking
Sat. Nov 16th, 2024

கண்டி பிர­தே­சத்தில் தற்­போது ஒரு­வித கண்நோய் தீவிர­மாக பரவி வரு­வ­தா­கவும் இந்நோய் அதி­க­மாக பாட­சாலை மாண­வர்­க­ளி­டமே காணப்­ப­டு­வ­தா­கவும் கடு­கண்­ணாவ வைத்­தி­ய­சாலை அதி­காரி திஸா­நா­ய க்க தெரி­வித்தார்.

இதே­ தகவலை கண்டி பிர­தான வைத்­தி­ய­சாலை உட்­பட சுற்­றுப்­புற வைத்­தி­ய­சாலை வைத்­திய அதி­கா­ரி­களும் தனியார் துறை வைத்­தி­ய­சா­லை­களின் வைத்­தி­யர்­களும் தெரி­வித்­தனர். கடந்த சில தினங்­க­ளாக கண்­சி­வந்த நிலையில் கண்­நோ­யினால் பீடி க்­கப்­பட்­ட­வர்கள் சிகிச்­சை­பெற்­றுக்­கொள்ள வரு­வ­தா­கவும் இவர்­களில் அதி­க­மாக பாட­சாலை மாணவர் மாண­வி­களே காணப்­ப­டு­ கின்­றனர் எனவும் அவர்கள் சுட்­டிக்­காட்­டு­ கின்­றனர்.

அதி­க­மான பிர­யா­ணங்­க­ளின்­போதும் பொது இடங்­களில் கூடி­யி­ருக்­கும்­போதும் இந்நோய் பர­வக்­கா­ர­ண­மாக உள்­ளது.

கண் சிவப்­பது, கபம் வெளி­யே­றுதல், கண்­வீக்கம், கண்ணில் நீர் வடிதல், தலை­வலி போன்ற அறி­கு­றிகள் கண்­நோ­யா­ளர்­க­ளிடம் காணப்­படும்.

இவ்­வாறு கண்நோய் உள்­ள­வர்கள் தாம­திக்­காது அரச வைத்­தி­ய­சா­லை­களில் கண் வைத்­தி­யர்­க­ளிடம் சென்று சிகிச்­சை­களை பெற்­றுக்­கொள்ள வேண்டும் என வைத்­தியர் திஸாநாயக்க தெரி­வித்­த­துடன் இந் நோய் சுமார் மூன்று தினங்கள் வரை காணப்­படும் எனவும் தெரி­வித்தார். அதே­வேளை இந்நோய் கண்டவர்கள் தங்கள் உடைகள் கட்டில் விரிப்புகள் மற்றும் பாவிக்கும் பொருட்களை சுத்தமாக கழுவி துப்புரவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Related Post