-ஜே.எம்.ஹபீஸ்-
நீர்வினியோக வடிகால் அமைப்பு சபை ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக கண்டி மாவட்டத்தில் தமது அன்றாடத் தேவைகளக்காக நீர்வினியோக சபைக்கு சமூகமளித்த பொது மக்கள் பலர் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.(27.3.2015)
கெடம்பே, கட்டுகாஸ்தோட்டை பஹல கொண்டதெனிய, மற்றும் பொல்கொல்ல ஆகிய இடங்களில் அமைந்துள்ள நீர்வினியோக வடிகால் அமைப்பு சபையியன் பிராந்தியக் காரியாலயங்களில் ஊழியாகள் பணியில் ஈடபடாத காரணத்தால் பொது மக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதையும் சிலர் வெளியே காத்து நிற்பதையும் படத்தில் காணலாம்.
இது தொடாபாக ஊழியர்கள் தெரிவிக்கையில் தமது தெழிற் சங்க நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே இப்போராட்டம் நாடு தழுவியதாக மேற்கொள்வதாகவும் முக்கியமாக சம்பளப்பிரச்சினை தொடர்பாகவே இது மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தனர்.
மேற்படி பணிப் பகிஷ்கரிப்பு தொடர்பாக நமது நிருபர் அங்குள்ள ஊழியர்களிடம் வினவிய போது ‘தாய்சங்கத்தின் பணிப்பின் பேரிலே இது மேற்கொள்ளப் படுவதாகவும் மேற்கொண்டு விபரங்களை வெளியிட முடியாது’ என்றும் அவர்கள் தெரிவித்தனர்.