Breaking
Fri. Nov 15th, 2024

கண்டி மாவட்டத்தில் மேலும் நான்கு  தையல் பயிற்சி நிலையங்களை அமைத்துத் தருவதற்கு அமைச்சர் றிசாத் முன் வந்துள்ளதாக மடவளை வை.எம்.எம்.ஏ. தலைவர் ஏ.எம்.சலாஹுதீன் தெரிவித்தார்.

அக்குரணை, கெலியோயா, கண்டி, கம்பளை ஆகிய இடங்களில் இந்த தையல் பயிற்சி நிலையங்களை அமைத்துத் தருவதாக அமைச்சர் தெரிவித்ததாக வை.எம்.எம்.ஏ. தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

மடவளை மதீனா கல்லூரி அஷ்ரப் கேட்போர் கூடத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விழாவில் கலந்துகொண்ட அமைச்சர், மடவளைக்கு தையல் பயிர்ச்சி நிலையம் ஒன்றை அமைத்துத் தருவதாக வழங்கிய வாக்குறுதியை நேற்று நிறைவேற்றினார். இதற்கிணங்க ஏற்கனவே தையல் பயிற்சி வழங்கப்பட்ட 20 யுவதிகளுக்கு அமைச்சர் றிசாத், நேற்று தையல் இயந்திரங்களை வழங்கி வைத்தார். அத்துடன் மடவளையில் இன்னும் 20 பேருக்கு தையல் பயிற்சியை வழங்கி, தையல் இயந்திரங்களையும் கையளிப்பதாக தெரிவித்திருக்கிறார். வெகுவிரைவில் கண்டி மாவட்டத்தில் மேலும் நான்கு இடங்களில் இந்த தையல் பயிற்சியை வழங்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் அறிவித்தார்.

இந்த நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், கூட்டுறவு அபிவிருத்தி தேசிய நிர்வாகப் பணிப்பாளர் றிஸ்மி, லக்சல நிறைவேற்றுப் பணிப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

z (1)

By

Related Post