Breaking
Mon. Dec 23rd, 2024
-நாகூர் ழரீஃப்-
இஸ்லாத்தின் வேகமான வளர்ச்சியை உலகம் கண்டு வரும் இக்காலத்தில் இஸ்லாத்தின் தனித்துவக் கோட்பாடுகள் பரவலாகப் பேசப்படவும் எழுதப்படவும் வேண்டும். அதனால் இஸ்லாத்தின் மீது பூசப்படும் பொய்யான சாயங்கள் கழுவப்பட்டுப் போகும்.
இந்த அடிப்படையில் ‘இஸ்லாத்தில் நடுநிலைக் கோட்பாடு’ என்ற தொணிப் பொருளில் கத்தாரில் உள்ள இலங்கை இஸ்லாமிய மையம் 22.23.24.25.26 ஆகிய தினங்களில் ஐந்து நாட்கள் தொடரான ஒரு கருத்தரங்கினை ‘துமாமா’ வில் உள்ள மஸ்ஜித் ஆயிஷாவில் ஒழுங்கு செய்துள்ளது. இக்கருத்தரங்கு அஸர் தொழுகை முதல் இஃதார் வரை நடைபெறும்.
சிறுவர்கள் இதில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளதுடன், பெண்களுக்கான fhd Online live telecast மூலம் கலந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன எனவும் அறியக்கிடைக்கின்றது.
இக்கருத்தரங்கில் இலங்கையின் பிரபல தாஇயும் எழுத்தாளரும் பேச்சாளருமான மரியாதைக்குரிய உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் கலந்து கருத்துரை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எனவே, கத்தார் வாழ் தமிழ் பேசும் சகேதரர்கள் மேற்படி அருமையான சந்தர்ப்பத்தை நழுவ விடாது, பயன்பெறுமாறு அன்பாய் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கும் பதிவுகளுக்கும் 00974 70559929 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

Related Post