Breaking
Fri. Jan 10th, 2025

வாகனத்திற்கு பேன்சி நம்பர் வைத்திருப்பது சமூகத்தில் தனக்கிருக்கும் அந்தஸ்தை நிரூபிக்கும் செயலாக உள்ள நிலையில், எண்ணெய் வளம்மிக்க கத்தாரில், 24 தனித்த அடையாளம் கொண்ட கார் நம்பர்களுக்காக, அரசுத் துறை ஆன்லைன் ஏலத்தை நடத்தி வருகிறது. இதில் கலந்து கொள்ளும் கத்தார் பணக்காரர்கள் மில்லியன் கணக்கில் ஏலம் கேட்பதால் இணைய ஏலம் களை கட்டியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் தொடங்கிய ஏலம் இன்று இரவு வரை நடைபெறவுள்ள நிலையில். நேற்று ’377773’ என்ற பேன்சி கார் நம்பர், 4 லட்சத்து 60 ஆயிரம் ரியாலுக்கு ஏலம் போனது (இந்திய மதிப்பில் சுமார் 6 கோடியே 84 லட்ச ரூபாய்). ஏலத்தில் இறுதி நாள் என்பதால் இன்று ஏலத்தொகை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Related Post