திருகோணமலை கந்தளாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரண்டாம் கொலனி பகுதியில் கைத்தெறி நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டன.
பசுமைப் பெண்கள் அமைப்பு மற்றும் ஒஸ்லோ பெண்கள் சிறு குழு ஆகிய இரு பெண்கள் அமைப்பும் இணைந்து எம்.ஜே எனும் நெசவுக் கைத்தெறி நிலையம் இன்று (21) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
பெண்கள் அமைப்பின் தலைவிகளான திருமதி.ஜெரா அருளானந்தம், திருமதி நைரூஸ் ஆகியோர்களது தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் உற்பத்திப் பொருட்களான கைப்பணி பொருட்கள், சாரான் உட்பட புடவை வகைகள் என பல உற்பத்திகளையும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டுள்ளார்.
நூல்களை கொண்டு சாரான் உற்பத்தியையும் பெண்கள் செய்து காட்டினர்.
குறித்த அமைப்புகளுக்கு தையல் இயந்திரங்கள், கதிரைகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அவர்களின் கோரிக்கைக்கு அமைய பூர்த்தி செய்து தருவதாகவும் இதன் போது அப்துல்லா மஃறூப் எம்.பி தெரிவித்தார்
குறித்த இவ் நிகழ்வில் கந்தளாய் பிரதேச சபையின் உபதவிசாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம்.முதார், கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி, சட்டத்தரணி பௌமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.