Breaking
Sat. Jan 11th, 2025

கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் மேலும் நெருக்கமாக பலப்படுத்தப்பட வேண்டும் என இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் ஷேர்லி வைற் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக செயற்பாடுகளை பலப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. கடந்த வாரம் முன்னோடியான ஏற்றுமதி அபிவிருத்திச் சபையில் ‘கனடாவுக்கான ஏற்றுமதி’ என்ற கருப்பொருளில் இடம்பெற்ற அமர்வொன்றின் போதே இது தொடர்பாக
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்; ரிஷாட் பதியுதீனுடன் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை கனடா-இலங்கை இடையேயான இருதரப்பு வர்த்தக கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியான ஒரு வளர்ச்சி போக்கினை காட்டியது. 2009 ஆம் ஆண்டில் 346 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட இருதரப்பு வர்த்தகம் 2013 ஆம் ஆண்டு 26.23 சதவீத அதிகரிப்புடன் 437 மில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டியது.

கனடா இலங்கையின் நம்பிக்கைக்குரிய வர்த்தக இலக்காகும். கடந்த ஆண்டு கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 437 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. உலகின் மொத்த நுகர்வோர் சந்தையின் கனடாவுடைய நுகர்வோர் சந்தை 2.25 சதவீதமாகும். அதேபோல் கனடாவின் அண்டை நாடான அமெரிக்க உலகின் மிகப்பெரிய சந்தையாகும். இச்சந்தையில், அதன் மொத்த நுகர்வோர் சந்தை 28 சத வீதமாக உள்ளது.

Related Post