Breaking
Mon. Dec 23rd, 2024

இலங்கையில் இருந்து கப்பல் மூலம் கடத்தப்படவிருந்த பறவைகள் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று வரலாற்றில் முதல் தடவையாக கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த வாரத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது 11 கிளிகள், 6 லவ்பேட்ஸ் மற்றும் 10 சிவப்பு வர்ண புல்புல் குருவிகள் என்பன கைப்பற்றப்பட்டன.

இந்த பறவைகள் அடைக்கப்பட்ட ஒரு பெட்டிக்குள் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

எனினும் குறித்த பறவைக்கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டபோது 10கிளிகளும் 4 லவ்பேட்ஸூம் இறந்துவிட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாலைத்தீவை சேர்ந்த இரண்டுபேர் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களுக்கு 200,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

இதேவேளை, மீட்கப்பட்ட பறவைகள், அரசுடைமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post