பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இரண்டாவது தடவையாக வரும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் ஆளுநர் உள்ளிட்ட அதிகாரி
களையும் சந்திக்க உள்ளார்.
5 நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கமலேஷ் சர்மா வடக்கின் அபிவிருத்தி குறித்தும் தற்போதைய நிலை குறித்தும் அறிந்து கொள்ளவுள்ளார்.
எனினும் 2011 ஆம் ஆண்டு வடக்கிற்கு பயணித்திருந்தார் என்றும் 3 வருடங்களின் பின்னர் இம்முறை வருகை தரவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய அமைப்பின் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய நிலை குறித்தும் கலந்துரையாடவுள்ளதுடன் முக்கிய அதிகாரிகளையும் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Comments are closed.