பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா இன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.
2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதே கமலேஷ் ஷர்மாவின் இலங்கை விஜயத்திற்கான நோக்கமாக அமைந்துள்ளது.
அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் சிலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமலேஷ் ஷர்மா எதிர்வரும் 29 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்வார் எனவும் வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.