Breaking
Mon. Dec 23rd, 2024

-எம்.எம்.எம். ரம்ஸீன் –

கம்பளை நகரில் வர்த்தக நிலையங்களிலும் வீடுகளிலும் கொட்டப்படும் குப்பைகூழங்கள் கடந்த ஒரு வார காலமாக  அகற்றப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று 18.05.2016 கம்பளை நகரில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது.

கம்பளை நகரில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி கம்பளை நகர சபையை சென்றடைந்தது.இதில் கம்பளை பகுதி சமயத் தலைவர்கள் நகர வர்த்தகர்கள் குடியிருப்பாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

இந்தஎதிர்ப்பு ஆரப்பாட்டத்திற்று ஒததுழைப்பு வழங்கும் வகையில்  கம்பளை நகரில் காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணித்தியாலயம்  சகல வர்த்தக நிலையங்களையும் மூடி வர்த்தகர்கள் ஒத்துழைப்பு வழங்கினர்.
கம்பளை அம்புலுவாவ பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில் அப்பகுதியில் சுழல் பாதிப்பு ஏற்படுவதாக அம்புலுவாவ   மக்களின் பாரிய எதிர்ப்புக் காரணமாக அம்புலுவாவையில் குப்பைகள் கொட்டுவதை நகர சபை நிறுத்தியுள்ளது. இதனால் நகரில் பல இடங்களிலும் குப்பைபக் குவிக்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.

By

Related Post