Breaking
Mon. Dec 23rd, 2024

கம்பஹா, கொட்­ட­தெ­னி­யாவ – படல்­கம, அத்­த­ரங்­கஹ பகு­தியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற ஐந்து வயதுடைய சிறுமி, கொடூ­ர­மாக பாலியல் துஷ்பிரயோகம் செய்­யப்­பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், கம்பஹா, கனேமுல்ல பகுதியில் எட்டு வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் சிறுமியின் பாட்டன், மாமா மற்றும் இளைஞன் ஆகியோர் கனேமுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் சிறுமியின் தாய் தொழிற்சாலை ஒன்றில் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாட்டனின் பாதுகாப்பில் இருந்து வந்துள்ள குறித்த சிறுமி குறித்த பாட்டன், மாமா மற்றும் இளைஞன் ஆகியோரால் பல தடவை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கம்பஹா மேலதிக மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் தாய், சிறுமியின் மற்றுமொரு சகோதரி ஆகியோரை சொந்த இடமான கம்பளைக்கு அனுப்பி வைக்க கனேமுல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் சந்தேக நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குமாறு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Post