Breaking
Sun. Dec 22nd, 2024

இங்கிலாந்தில் நோர்த்தாம்டன் சயர் மாகாணத்தில் உள்ள கிங்ஸ்தோர்பி பகுதியை சேர்ந்தவர் அலிஸ்டெயர் லீத். இவர் ‘பேஸ்புக்’ இணைய தளத்தில் தனது கிரெடிட் கார்டு மற்றும் வங்கி கணக்குகளை பதிவு செய்திருந்தார்.

விளையாட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள அதை அவர் பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் அவரது 5 வயது மகன் அலெக்சாண்டர் தனது தந்தையின் கம்ப்யூட்டரில் ‘கேம்’ விளையாடிக்கொண்டிருந்தான்.

அந்த விளையாட்டில் அடுத்த நிலைக்கு செல்ல பணம் தேவைப்பட்டது. அதற்கு அவனிடம் பணம் இல்லை. உடனே தனது தந்தையின் கிரெடிட் கார்டு எண்ணை பயன்படுத்தி 400 யூரோவை அதாவது சுமார் ரூ. 35 ஆயிரத்தை எடுத்து செலவு செய்தான்.

அதை தொடர்ந்து அவனது தந்தை அலிஸ்டெயர் லீத் கிரெடிட் கார்டின் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ‘பேஸ்புக்’ இணைய தளம் நிர்வாகத்திடம் புகார் செய்தார். அதை பரிசீலித்த நிர்வாகம் அவருக்கு பணத்தை திரும்ப அளித்தது.

இது குறித்து லீத் கூறும்போது, “குழந்தைகள் பணத்தை எளிதாக கையாளும் வகையில் விளையாட்டு மென்பொருள் நிறுவனங்கள் தங்களது அமைப்புகளை வைத்துள்ளனர். இது மிகவும் தவறான போக்கு. எனது குழந்தையின் இந்த செயல் எனக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. எனினும் எனக்கு அவர் மேல் கோபம் இல்லை” என்றார்.

Related Post