Breaking
Mon. Nov 18th, 2024

நாட்டை பிரிக்க ஆயுத முனையில் முடி­யாது போனதால் அர­சியல் ரீதி­யாக அதனை முன்­னெ­டுக்க ஆயுதக் குழுக்­களின் அர­சியல் பிர­திநி­திகள் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக உதய கம்­மன்­பில எம்.பி. நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரிவித்ததால் முதல் நாள் சபை அமர்­வி­லேயே சர்ச்சை தலை­தூக்­கி­யது.

இவ்­வாறு சபையில் ஆயு­தங்கள் தொடர்­பாக உரை­யாற்ற முடி­யாது என உதய கம்­மன்­பில எம்.பி.யின் உரைக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது எதிர்ப்பை வெளி­யிட்டார்.

எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின்முத­லா­வது சபை அமர்வு, சபா­நா­ய­க­ராக தெரி­வான கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் நேற்று இடம் பெற்­றது. இதன் போது புதிய சபா­நா­ய­க­ருக்கு வாழ்த்து தெரி­வித்து கட்சித் தலைவர்கள் சபையில் உரை நிகழ்த்­தினர்.

இந்த வரி­சையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்­சி­யான பிவி­துரு ஹெல உறு­ம­யவின் தலை­வரும் எம்.பி.யான உதய கம்­மன்­பில தனது பாரா­ளு­மன்ற கன்னி உரையின் போது மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­த­தா­லேயே சர்ச்சை கிளம்­பி­யது. சபையில் உரை­யாற்­றிய உதய கம்­மன்­பில எம்.பி., ஆயுதப் போராட்­டத்தால் நாட்டை பிரிக்கும் முயற்சி முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இது தோல்­வி­ய­டையச் செய்­யப்­பட்­ட­தோடு அம்­மு­யற்சி வெற்றிப் பெற­வில்லை.

இன்று அம்­மு­யற்­சி ஆயுதக் குழுக்­களின் பிர­தி­நி­தி­களால் அர­சியல் ரீதி­யாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. அதற்­காக சமஷ்டி முறையை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர் என தெரி­வித்தார்.

இதன் போது சபையில் ஒழுங்கு பிரச்­சி­னையை எழுப்பிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் ஆயு­தங்கள் தொடர்­பாக உரை­யாற்ற முடி­யாது. எதிர்க் கட்­சியில் அங்கம் வகிக்கும் கட்சி தலை­வர்­க­ளுக்கு உரை­யாற்ற சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டது.

ஆனால் அதனை பயன்­ப­டுத்தி ஆயு­தங்கள் தொடர்பில் சபையில் உரை­யாற்ற முடி­யாது என தனது ஆட்­சே­ப­னையை தெரி­வித்தார். இச் சந்­தர்ப்­பத்தில் ஆளுந்­த­ரப்பு எம்.பி.க்கள் மத்­தியில் இவ்­வு­ரைக்கு எதி­ராக சல சலப்பு ஏற்­பட்­ட­தோடு சுசில் பிரேமஜயந்த எம்.பி. இதன் போது தலையில் கைவைத்தபடி அமர்ந்திருப்பதை காணமுடிந்தது.இவ்வாறானதொரு நிலையில் உதய கம்மன்பில எம்.பி. தனது உரையை முடித்து ஆசனத்தில் அமர்ந்தார்.

Related Post