பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவின் விசாணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறுமென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவினை உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் பிறப்பித்துள்ளார்.
எந்தவொரு சரியான ஆதாரங்களும் இன்றி தான் கைதுசெய்யப்பட்டமை தனது அடிப்படை உரிமையை மீறும் செயல் எனத் தெரிவித்தும், அதற்கான நஷ்டஈட்டினை வழங்கக்கோரியும் அடிப்படை உரிமை மீறல் மனுவினை உயர் நீதிமன்றத்தில் கம்மன்பில தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையிலேயே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இதேவேளை குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருக்கும் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் குழுவினருக்கு நீதிமன்றம் அறிவிப்பினை விடுத்துள்ளது.
உதய கம்மன்பில அவுஸ்திரேலிய தனியார் நிறுவனமொன்றிற்கு சட்டவிரோதமான முறையில் பங்குகளை விற்பனை செய்தமை தொடர்பாக விசேட விசாரணைப் பிரிவினர் அவரை கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.