Breaking
Sun. Dec 22nd, 2024

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மற்றம் நிர்க்கதியாகியுள்ள அனைவருக்கும், நாடாளுமன்றம் சார்பாக அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இந்த அனர்த்த விடயத்தில் முழு நாடாளுமன்றமும் அவதானம் செலுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (18) புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கூடியது. சபாநாயகரின் அறிவிப்பின் போதே அவர் மேற்கண்டவாறு அறிவித்தார். நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவிய அசாதாரண வானிலையினால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பலர் உயிரிழந்தும் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இந்த அனர்த்த பாதிப்புகளை நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வருவதுடன் இந்த விடயத்தில் முழு நாடாளுமன்றமும் கவனம் செலுத்தியுள்ளது.

அத்துடன் மரணமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நாடாளுமன்றத்தின் சார்பாக அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றேன் என்றும் கூறினார்.

By

Related Post