Breaking
Mon. Dec 23rd, 2024

நாட்டின் பல பாகங்­க­ளிலும் பலத்த காற்­றுடன் கூடிய மழை பெய்­வ­தற்­கான சூழல் காணப்­ப­டு­வதால் கரை­யோரப் பிர­தே­சங்­களில் வாழும் மக்கள் மற்றும் கடற்­றொ­ழிலில் ஈடு­ப­டு­கின்­ற­வர்கள் மிகவும் அவ­தா­ன­மாக செயற்­ப­ட­ வேண்டும் என கேட்­டுக்­கொள்­வ­தாக வளி­மண்­டள­வியல் திணைக்­களம் விடுத்­துள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

நாட­ளா­விய ரீதியில் கடற்­க­ரைப்­ப­கு­தி­களில் பலத்த காற்று வீசு­வ­தற்­கான அதி­க­ளவு வாய்ப்­புகள் காணப்­ப­டு­கின்­றன. இத­ன­டிப்­ப­டையில் மேற்கு, வட­மேற்கு,தெற்கு மத்­திய மற்றும் சப்­ர­க­முவ மாகா­ணங்­களில் அதி­க­ளவு மழை பெய்­வ­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன.

கடற்­க­ரைப்­ப­கு­தி­களில் மணித்­தி­யா­ல­த்­துக்கு 60 தொடக்கம் 70 கிலோ­மீற்றர் வரையில் காற்று வீசக்­ கூ­டிய சூழல் காணப்­ப­டு­வ­தனால் கொழும்­பி­லி­ருந்து மாத்­தறை வழி­யாக காலி வரை­யான பகு­தி­களில் இடி­யுடன் கூடிய மழை பெய்யக் கூடும். அத்­தோடு மேற்­கி­லி­ருந்து தென்­மேற்குத் திசைக்கு மணித்­தி­யா­ல­த்­துக்கு 35 தொடக்கம் 40 கிலோ­மீற்றர் வரையில் காற்று வீசக்­ கூடும்.

கடல்­சார்ந்த பகு­தி­க­ளான புத்­தளம் தொடக்கம் திரு­கோ­ண­மலை மன்னார், காங்­கே­சன்­துறை வரை­யான, அம்­பாந்­தோட்டை தொடக்கம் மட்­டக்­க­ளப்பு ஊடான பொத்­துவில் பகு­தியில் மணித்­தி­யா­ல­த்­துக்கு 70 தொடக்கம் 80 கிலோ­மீற்றர் வரையில் காற்று வீசக்­கூ­டிய சூழல் காணப்­ப­டு­கின்­றது. இதனால் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு கடற்­பி­ர­தே­சங்­க­ளி­லுள்ள மக்கள் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும். நாடு முழு­வதும் மணித்­தி­யா­லத்­துக்கு 50முதல்-55 கிலோ­மீற்றர் வரையில் காற்று வீசக்­கூடும். தற்­கா­லி­க­மாக நிலைக்­கொண்­டுள்ள குறித்த தாழமுக்க பலத்த சுழல் காற்­றாக மாறு­வ­தற்­கான சூழல் காணப்படுகின்றது. இதனால் இடியுடன் கூடிய மின்னலும் சில பகுதிகளில் ஏற்படலாம். எனவே மக்கள் சீரற்ற காலநிலையினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

By

Related Post