ஒடிசா மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டதால், அவருக்கு தனியார் வேனில் பிரசவமாகியுள்ள சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராயகாடா மாவட்டம் பலக்கமனா கிராமத்தைச் சேர்ந்தவர் சுனிதா, இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து சுனிதாவின் கணவர் ஆம்புலன்ஸ் சேவையான 102க்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், அவசர ஆம்புலன்ஸ் சேவையான 106க்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
தொடர்பு கொண்டு ஒரு மணிநேரத்திற்கு மேலாகிவிட்டதால், குடும்பத்தினர் உதவியுடன் சுனிதாவை சைக்கிளில் கொண்டு சென்றுள்ளார் கணவர்.
பாதி வழியில் பிரசவ வலி அதிகரித்துள்ளது, சுனிதா வலியால் துடித்துள்ளார். சைக்கிளை நிறுத்திய கணவர் ரோட்டில் சென்றுக்கொண்டிருந்த ஒரு வேன் ஓட்டுநரிடம் உதவி கேட்டுள்ளார்.
இதையடுத்து, வேனில் மருத்துவமனைக்கு விரைந்த நிலையில் சுனிதாவிற்கு வேனிலேயே பிரசவமாகியுள்ளது.
இதையடுத்து அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்ட சுனிதாவும், குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மாவட்ட நீதிபதி Laxmikant Behera கூறியதாவது, சாலை தொடர்பான சரியான தகவல்கள், தொலைத்தொடர்பு வசதி மற்றும் மொழி பிரச்சினைகளினால் 108 மற்றும் 102 ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.