-ஊடகப்பிரிவு-
கற்பிட்டி பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சமாதானக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வொன்று, இன்று (16) கற்பிட்டி அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் கற்பிட்டி அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில், ஐ.தே.முன்னனியின் பிரதேச சபை உறுப்பினர்கள் சபையை அதிகப்படியான ஆசனங்களால் வெற்றிப்பெற்றும், தாம் ஆட்சியமைக்க முடியாமல் போனதையிட்டு கவலை வெளியிட்டனர். அத்துடன், தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு தாம் சேவையாற்ற வேண்டுமெனவும், தமக்கான சேவைகளை பகிர்ந்து தர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.
இதன்போது நவவி எம்.பி உரையாற்றுகையில்,
பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தனக்கு வரும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளைக் கட்சி பேதம் பாராது நான் அனைவருக்கும் ஒதுக்கித்தருவேன் என வாக்குறுதியளித்தார்.