கற்ற சமூகமொன்றினை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்,பாலர் கல்வி என்பது மிகவும் முக்கியமானது அவர்களை நெறிபிரழா செய்வதற்கு அது இன்றியமையாததாகும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசி தலைவர் றிசாத் பதியுதீன் சாய்ந்தமருதுவில் கூறினார்.
சாய்ந்தமருதுவில் இயங்கும் கல்வி நிறுவனமான கொம்டெக் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட முன்பள்ளி ஆசிரியைகளுக்கான டிப்ளோம பாடநெறியினை நிறைவு செய்த கொண்ட யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மேலும் தேசிய தவைர் றிசாத் பதியுதீன் உரைாயற்றும் போது கூறியதாவது –
பணிகளில் எல்லாம் சிறந்தது கற்பிப்பதாகும்,இந்த சமூகத்தினை நல்ல பிரஜைகளாக உருவாக்கித்தருகின்ற பணியினை ஆசிரியர்கள் செய்கின்றார்கள்,அதில் முன்பள்ளி ஆசிரியைகளின் பணி மகத்தானது.ஒரு பிள்ளை பெற்றோருடன் தனது வீட்டில் இருக்கும் நேரம் பாசத்துக்குரிய நேரமாகும்,ஆனால் பாடசாலையில் ஆசிரியையுடன் மாணவர்கள் இருப்பது பெற்றோருடனும்,நண்பர்களுடனும் இருக்கின்ற ஒரு உணர்வை அவர்களுக்கு எற்படுத்தும்,இதன் மூலம் அவர்களது உள்ளார்ந்த உணரை்வுகளின் அசைவுகளை அறியக கூடியவர்களாக ஆசிரியர்கள் இருக்கின்றனர்.
இந்த அறிவு பயணம் என்பது இன்றைய காலகட்டத்தில் எமக்கு தேவையானது.எமது நாட்டில் உள்ள துறைகளை எடுத்துக்கொண்டால் அதில்
2-5 வரைக்குமான விகிதாசாரத்தை கொண்டவர்களே இருக்கின்றனர்.இந்த புள்ளி விபரங்களை மையப்படுத்தி நாம் கல்வித் துறைக்கான முதலீடுகளை அதிகமாக செய்ய வேண்டியுள்ளது.இதனை செய்வதன் மூலம் எமது சமூகம் கல்வித் துறையாளர்களை மட்டுமன்றி துறை சார்ந்தவர்களை உருவாக்குவதற்கான அடித்தளத்தினை இட முடியும்.என்றும் கூறினார்.