Breaking
Mon. Jan 6th, 2025
Some of the weapons collected in Wednesday's Los Angeles Gun Buyback event are showcased Thursday, Dec. 27, 2012 during a news conference at the LAPD headquarters in Los Angeles. Mayor Antonio Villaraigosa's office says the weapons collected Wednesday included 901 handguns, 698 rifles, 363 shotguns and 75 assault weapons. The buyback is usually held in May but was moved up in response to the Dec. 14 massacre of students and teachers at Sandy Hook Elementary School in Newtown, Conn. (AP Photo/Damian Dovarganes)

திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னைமரவாடி பகுதியிலுள்ள கலப்புக் கடலில் நேற்று சனிக்கிழமை (03), பொலிஸாரின் உதவியுடன் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கடற்பரப்புக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 2 தடவையும் இம்மாதம் 1ஆம் திகதி ஒரு தடவையும் ஆயுதங்கள் சிக்குண்டன.

இவ்வாறு மீனவர்களின் வலையில் தொடர்ந்து ஆயுதங்கள் சிக்குவதால், கடற்படையின் மேற்கொண்ட தேடுதலின் போது, ரி-56 துப்பாக்கி, கைக்குண்டுகள் 2 மற்றும் துப்பாக்கி ரவைகள் 535, புகைக் குண்டு 1, துப்பாக்கி பாகங்கள் போன்றவை மீட்கப்பட்டதாக புல்மோட்டை பொலிஸாஸ் தெரிவித்தனர்

மேலும் குறித்த கடற்பரப்பில் தொடர்ந்து தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

By

Related Post