எண்ணற்ற இளைஞர்களை வழிநடத்திய சகாப்தம் ஓய்ந்து விட்டதாக ஓய்ந்துவிட்டது. ஆம். இளைஞர்களின் நம்பிக்கையாகத் திகழ்ந்த அப்துல் கலாம் இந்த பூமியில் இருந்து விடைபெற்றார்.
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு, அப்துல் கலாம் நேற்று (27) காலமானார். அவரது உடலம் இன்று (28) காலை டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அப்துல் கலாமின் உடலம் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதி டுவிட்
”வாழத்தகுதியான பூமி” என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு உரையாற்றச் சென்றபோதே பூமிக்கு அவர் வந்த பயணத்தை முடித்துக் கொண்டு விண்ணுலகம் திரும்பினார்.
”வாழத்தகுதியான பூமி” என்ற தலைப்பில் IIM மாணவர்களுக்கு உரையாற்ற Shillong செல்கிறேன் என்ற தகவலை டுவிட்டரில் பதிந்துவிட்டு அவர் சென்றுள்ளார். இதுவே கலாமின் இறுதி டுவிட்டாக பதியப்பட்டுள்ளது.
இறுதி புகைப்படம்
டொக்டர் அப்துல் கலாம் IIM மாணவர்களுக்கு உரையாற்றச் சென்ற வேளையில் ஏற்பட்ட மாரடைப்பினால் கீழே விழுந்தார். இதன்போது எடுக்கப்பட்ட அவரின் இறுதிப் புகைப்படத்தை மேலே காணலாம்