Breaking
Tue. Mar 18th, 2025

மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் அனுதாப செய்தியை வெளியிட்டுள்ளார்

அப்துல் கலாமின் மறைவு குறித்து முகப்புத்தகத்தில் ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,

இந்தியாவை புதியதொரு யுகத்திற்கு அழைத்துச் சென்ற தலைசிறந்த மனிதர் மௌனித்துவிட்டார்.
நீங்கள் எப்போதும் எமக்கு முன்னுதாரணமாயிருப்பீர்கள்.

உங்களைப் போன்ற ஒரு தலைசிறந்த மேதை மறைந்தது பாரத தேசதுக்கு மட்டுமல்ல அறிவால் நிறைந்த முழு உலகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

உங்கள் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவுத்துக் கொள்கின்றேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Post