Breaking
Thu. Dec 26th, 2024

யூ-டியூபில் 1 கோடியே 40 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘கோஜிடோ’ என்ற கோபக்கார கொரில்லா வீடியோவை பார்த்தால் ஈரக்குலையே நடுங்குகிறது.

அமெரிக்காவின் நெபரஸ்கா மாநிலத்தில் மிருகங்களை மிகவும் நெருக்கத்தில் பார்ப்பதற்காகக் பார்வையாளர்களுக்கான கண்ணாடிக் கூண்டு கொண்ட மிருகக் காட்சி சாலை ஒன்று உள்ளது. இங்கு வார விடுமுறையைக் கொண்டாட தனது குடும்பத்தினருடன் கெவின் கேவ் வந்திருந்தார்.

கொரில்லா மீது மிகுந்த ஆர்வம் கொண்ட கெவினின் 7 வயது பெண், கொரில்லாவை அருகில் பார்த்த மகிழ்ச்சியில் கொரில்லா செய்வது போல், தனது மார்பில் இரண்டு கைகளால் அடித்துக் கொண்டுள்ளார். தன்னை கலாய்ப்பதால் கடுப்பான கொரில்லா ஓடி வந்து கண்ணாடி மேல் பாய்ந்தது.

கொரில்லாவின் இந்த நடவடிக்கையால் 7 வயது சிறுமி உட்பட அந்த குடும்பமே காய்ச்சல் கண்டுள்ளது.

Related Post