Breaking
Sun. Dec 22nd, 2024

துருக்கியில் அதிபரின் பாதுகாப்பு படை கலைக்கப்படும் என பிரதமர் பினாலி யில்டிரிம் அறிவித்துள்ளார்.

துருக்கியில் கடந்த 15-ந் தேதி ராணுவத்தில் ஒரு பிரிவினர், ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த முயற்சியை துருக்கி அரசு பொதுமக்கள் துணையுடன் முறியடித்தது.

இந்த ராணுவ புரட்சி முயற்சியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ராணுவத்தினர், அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான அதிகாரிகள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அங்கு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கு அதிபரின் பாதுகாப்பு படையும் கலைக்கப்படும் என பிரதமர் பினாலி யில்டிரிம் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “புரட்சி முயற்சியில் ஈடுபட்ட அதிபரின் பாதுகாப்பு படையினர் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படை இருந்து எந்தப் பலனும் இல்லை. இனி அந்தப் படை தேவையில்லை. எனவே அந்தப் படை கலைக்கப்படும்” என அறிவித்தார்.

அதிபரின் பாதுகாப்பு படையில் 2,500 வீரர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post