வாழைச்சேனை நிருபர்
கல்குடாத் தொகுதியில் உள்ள முஸ்லீம்களின் தீர்மானமே எனது அரசியலில் இறுதித் திர்மானமாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ள நிலையில் அது முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு வழங்கப்படவுள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக கேட்டபோதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நான் அரசியலில் பிரவேசித்ததில் இருந்து கல்குடாத் தொகுதியில் உள்ள ஆதரவாளர்கள் எனது வெற்றி தோல்விகளில் பங்கெடுத்தவர்கள். இதனால் ஜனாதிபதித் தேர்தலை எதிர்நோக்கி இருக்கின்ற இச் சந்தர்ப்பத்தில் நான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெறுவதா, இல்லையா என்ற தீர்மானத்தை எனது கல்குடாத் தொகுதி ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்த பின்பே முடிவு எடுப்பேன். எனது கல்குடாத் தொகுதி மக்களின் விருப்புக்கு எதிராக நான் செயற்பட மாட்டேன்” என்றும் கூறினார்.