எம்.ரீ.எம்.பாரிஸ்
கல்குடா ஆட்டோ சங்கத்தின் 25வது ஆண்டு நிறைவையொட்டி ஆட்டோக்களுக்கான டயா் வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு அரங்கில் நேற்று ஓக் 28.2014 சங்கத்தின் தலைவா் ஏ.எல்.எம். புகாரி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டார். விஷேட அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் கே.பீ.எஸ் .ஹமீட், பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரீ.அஸ்மி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம். றுவைத், ஓட்டமாவடி வர்தக சங்க தலைவா் நியாஸ் ஹாஜி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர்கலந்து சிறப்பித்தனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களின் நிதியொதுக்கீட்டின் மூலம் முதல் கட்டமாக நூறு ஆட்டோ சாரதிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்ப் பெறுமதியான ஒரு சோடி டயர்கள் விகிதம் ஆட்டோ சாரதிகளிடம் கையளிக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாகவும் இன்னும் 100 ஆட்டோக்களுக்கான டயர்கள் மிக விரைவில் கையளிக்கப்படுமென முன்னாள் அமைச்சர் தனதுரையின் போது குறிப்பிட்டார்.