கல்குடா கராத்தே விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட ,மாகாண, தேசிய மட்டத்திலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வு நேற்று 17.02.2017 ஆம் திகதி அதன் தலைவர் நவாஸ் மெளலவி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
பிரதி அமைச்சர் தொடர்ந்து உறையாற்றுகையில் .
இக்கால கட்டத்தில் இவ்வாறான நிகழ்வுகளில் அதிகம் தங்களது பிள்ளைகளை கலந்து கொள்ள செய்வதன் மூலமும் எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை சுபீட்சமாக அமையும் என்று குறிப்பிட்டார்.
இக்கால கட்டத்தில் போதை பாவனை அதிகம் காணப்படுகின்றது இதனை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் எமது இளைஞர்களை பாதுகாத்து கொள்ள முடியும்.
தற்காப்பு கலையின் மூலம் மன அமைதியையும் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒரு கலையாகும்.
இந்நிகழ்வில் முன்னாள் பிரதேச சபை உதவித் தவிசாளர் நெளபர் , வாழைச்சேனை பொலிஸ் நிலைய அஹமட் , அல் ஹம்றா வித்தியாலய அதிபர் சுபைதீன், பிரதி அதிபர் சையின் மற்றும் ஊர்பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.