Breaking
Mon. Dec 23rd, 2024
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
வீடியோ அமீர் அலியினால் அபிவிருத்தி அடையும் கல்குடா:-
கல்குடா பிரதேசத்தில் பாரளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீடுகளில் இருந்தும் கிராமிய பொருளாதார அமைச்சிலிருந்தும் மீள் குடியேற்ற அமைச்சிலிருந்தும் பிரதமருடைய பொருளாதார திட்டமிடல் அமைச்சிலிருந்தும் மொத்தமாக 100மில்லியன் ரூபாய்கள் செலவில் கல்குடா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்களினுடைய திறப்பு விழா நிகழ்வுகளில் கிராமிய பொருளாதர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோக பூர்வமாக  நிறைவடைந்த திட்டங்களை மக்களின் பாவனைக்காக இன்று 15.01.2017 ஞாயிற்றுக் கிழமை திறந்து வைத்தார்.
பிரதி அமைச்சர் அமீர் அலியின் முயற்சியினால் கல்குடாவிற்கு கொண்ட்டு வரப்பட்ட குறித்த நூறு மில்லியன் ரூபாய்கள் வேலை திட்டத்தில் பிரதி அமைச்சர் அமீர் அலியின் அமைச்சான கிராமிய பொருளாதார அமைச்சினூடாக  35 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அந்த வகையிலே இன்று மக்களிடம் உத்தியோக பூர்வமாக கயளிக்கப்பட்ட நிகழ்வில் முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர்களான எல்.ரி.புர்கான் ஐ.ரி.அஸ்மி நெளபல் அல்பத்தாஹ் கோறளைப்பற்ரு மத்தி பிரதேச செயலகத்தின் செயலாளர் நெளபல் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம். றுவைத் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்ததுடன் முஸ்லிம் காங்கிரசின் முக்கிய போராளியாக கடந்த காலங்களில் செயற்பட்டு வந்த இந்தியன் பாய் எனப்படும் சஹுல் ஹமீட்  மீராவோடைஇ மாஞ்சோலையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலியுடன் கைகோர்த்து அவருடைய வெற்றிக்காக எதிர்காலத்தில் பாடுபட உள்ளதாக தெரிவித்தார்.
குறித்த பல நிறைவடைந்த அபிவிருத்தி திட்டங்களை கல்குடா பிரதேசத்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வினதும் பிரதேசத்து மக்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியிடம் விடுத்த வேண்டுகோள்களினது காணொளியானது எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றப்பட்டுள்ளது.

By

Related Post